இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் சமீபத்தில் ஒரு சர்வே எடுத்தனர், அதில் "இந்தியாவில் திருமணமான பெண்களின் செக்ஸ் ஆர்வம், அவர்களது செக்ஸ் விருப்பு வெறுப்புகள், செக்சில் அவர்களது எதிர்பார்ப்புகள்" போன்றவைகளைப் பற்றி புதிய சர்வே ஒன்றினை எடுத்துள்ளனர்.
இந்த சர்வே அடிப்படையில் வந்துள்ள முடிவுகள் பெண்கள் ஆர்வத்துடன் உடலுறவில் ஈடுபடுவது குறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தை செக்ஸாலஜிஸ்ட்டு சுட்டிக்காட்டுகிறார். “தற்போதைய இயந்திரமய வாழ்க்கையால் பெண்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவது குறைந்து வருகிறது. குழந்தைகள் பற்றியோ, பண நெருக்கடி பற்றியோ, வேலைபார்க்கும் இடங்களில் உள்ள சிக்கல் பற்றியோ, கணவரால் ஏற்படும் பொதுவான குறைபாடுகள் பற்றிய சிந்தனையிலோ பெண்கள் சிக்கிக்கொள்வதால் அவர்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவதில்லை. அதனால் தம்பதிகள் இருவருக்குமே அதில் திருப்தி ஏற்படாமல் போய்விடுகிறது. திருப்தியின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். திருப்தியடையாத பெண்கள் கணவரிடம் எரிச்சல்படுகிறார்கள். அது கோபமாகவும், சில நேரங்களில் பகையாகவும் மாறுகிறது…”- என்கிறார்.
சரி.. பெண்கள் கணவரோடு உறவில் இருக்கும்போதும் எதைப் பற்றி நினைப்பார்கள்?
- `நாளை என்ன சமையல் செய்வது?’ என்று பெரும்பாலான பெண்கள் அந்த நேரத்திலும் யோசனையில் ஆழ்கிறார்கள்.
- `இந்த நேரம் பார்த்து குழந்தை விழித்துவிட்டால் என்ன செய்வது?’ என்ற கவலையும் தங்களை வாட்டும் என்று சொல்கிறார்கள்.
- `இவர் எப்போது முடிப்பார்.. நாம் தூங்கி, காலையில் எழுந்து அத்தனை வேலையையும் பார்க்க வேண்டுமே..!’ என்று உறவு நேரத்தில் பெண்கள் கவலைப்படுவதும் உண்டு என்கிறது இந்த ஆய்வு.
கணவரோடு செக்ஸ் வைத்துக்கொள்வது, அவரோடு தூர இடங்களுக்கு சுற்றுலா செல்வது, நடனம் மற்றும் நல்ல உணவு உண்பது ஆகிய மூன்றில் எதற்கு நீங்கள் முன்னுரிமை கொடுப்பீர்கள்? என்ற கேள்விக்கு கிடைத்திருக்கும் பதில் சுவாரஸ்யமானது.
51 சதவீத பெண்கள் `கணவரோடு சற்று தூரமான பகுதிக்கு இன்பச் சுற்றுலா செல்வதைத்தான் விரும்புவோம்’ என்று கூறியிருக்கிறார்கள். 38 சதவீத பெண்கள் `கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு கணவரோடு ஜோடியாக நடனம் ஆட வேண்டும். பின்பு நன்றாக சாப்பிட வேண்டும். அதுவே எங்களுக்கு பிடித்தமானவை’ என்று கூறியிருக்கிறார்கள். மீதமுள்ளவர்களே `அவரோடு தனிமையில் உட்கார்ந்து சிரித்து மகிழ்ந்து பேசிவிட்டு, உறவினைத் தொடர்வோம்’ என்கிறார்கள்.
தாம்பத்ய உறவு திருப்தியாக நடந்துமுடிந்த பின்பு அதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன? -என்ற கேள்விக்கு …..
- `எங்களுக்கு இடையே அதுவரை இருந்த மனக் கசப்புகள் எல்லாம் அடியோடு நீங்கி, புதிதாய் இணைந்த ஜோடிபோல் குதூகலமாய் வாழ்க் கையை நகர்த்தி, அடுத்த முறை இணைவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்’ என்று 37 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள்.
- அவ்வப்போது ஏற்படும் உடல்வலியும், தலைவலியும் அதன் பின்பு சில நாட்கள் காணாமல் போனது என்று 21 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.
- உடல் முழுவதும் நெகிழ்ச்சியாகி, வழக்கத்தைவிட அதிக சுறுசுறுப்பாக இருக்கிறேன். என்னுடைய அன்றாட வேலைகளை வேகமாக பார்க்கிறேன் என்று 19 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.
- பல நாட்களாக சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டேன். திருப்தியான உறவு கொண்ட பின்பு சில நாட்களாக நன்றாகத் தூங்குகிறேன் என்று 14 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
- மனதுக்குள் விவரிக்க முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. எனக்காக அவரும், அவருக்காக நானும் வாழ்கிறோம் என்ற திருப்தியையும், நம்பிக்கையையும் திருப்தியான தாம்பத்ய உறவு ஏற்படுத்தியிருக்கிறது என்று 9 சதவீதம் பேரும் தெரிவித்திருக்கிறார்கள்.
Thanks to http://inimaiyanaillaram.blogspot.com/
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.