BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 15 July 2014

மொபைல் மற்றும் நான் வெஜ் வகை உணவுகள் கற்பழிப்புக்கு வழிவகுக்குமாம் !!! சொல்லுகிறார் பீகார் அமைச்சர் ...



இந்தியாவில் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் இந்த வேளையில் , ஒவ்வொரு அமைச்சரும் இப்போது அதற்கான காரணங்கள் என்ற வகையில் ஒவ்வொரு நாளும் ஒன்றை சொல்லிக் கொண்டு இருக்கின்றனர் . இப்போது அந்த வகையில் மொபைல் மற்றும் நான் வெஜ் வகை உணவுகள் கற்பழிப்புக்கு வழிவகுக்கும் என்று பீகார் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார் . 

பீகார் கலை, கலாச்சாரம் மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் பினய் பீஹாரி கூறுகையில் ,  "பல மாணவர்கள் மொபைல்களை தவறாக பயன்படுத்துகின்றனர் . ஆபாச படங்கள் மற்றும் இரட்டை அர்த்த பாடல்களை கேட்டு மனதை பாழாக்கி இருக்கின்றனர் . அசைவ உணவுகள் மாணவர்களிடையே ஒரு கடும் மனதை உருவாக்குகிறது " என்றார்  . மேலும் அவர் இரண்டு மாணவர்களை பள்ளியில் மொபைலில் ஆபாச படங்கள் பார்த்து கொண்டு இருக்கும் போது பிடித்தேன் என்றார்  . மேலும் இந்த பள்ளிகளில் அதிகாரிகள் அனைவரும் அடிக்கடி சோதனை செய்து மொபைல் பயன்படுத்தும் மாணவர்களை பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார் . 




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media