இன்று பிரேசிலில் பிரிக்ஸ் மாநாடு தொடங்க உள்ளது . இந்த பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர்களாக பிரேசில் , ரஷ்யா , இந்தியா , சீனா , தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் இருக்கின்றன . இந்த உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவரும் நேற்று பிரேசில் வந்து சேர்ந்தனர் . மாநாட்டிலும் , மேலும் அந்த அந்த நாடுகளின் தலைவர்களுடனும் மோடி தனியே சந்தித்து பேச உள்ளார் . சீனாவின் அதிபருடன் இரு நாடுகளின் உறவை மேம்படுத்துவதை குறித்து பேச உள்ளார் .
மேலும் கடந்த பிரிக்ஸ் மாநாட்டில் , உறுப்பு நாடுகள் இணைந்து ஒரு மேம்படுத்தப்பட்ட வங்கியை தொடங்க திட்டமிட்டு இருந்தனர் . இந்த வங்கியின் மூலம் உறுப்பு நாடுகள் வளரும் நாடுகளின் திட்டங்களுக்கு கடனுதவி அளிக்கப்படும் . இந்த புதிய மேம்பாட்டு வங்கியின் தலைமையகத்தை டில்லியில் நிறுவதை குறித்து மோடி இன்று பேச உள்ளார் . இதனால் இந்தியாவுக்கு உலக நாடுகளின் மத்தியில் மதிப்பு கூடும் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.