BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 15 July 2014

5 மாநிலங்களில் புதிய ஆளுநர் நியமனம் செய்ய உத்தரவு !!



குஜராத் , உத்தர பிரதேசம் , மேற்கு வங்களம் , சத்தீஷ்கர் , மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமிக்கும் படி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் .

புதிதாக பொறுப்பேற்ற மத்திய அரசு மத்திய அமைச்சரவையில் இடம் பெறாத மூத்த தலைவர்களுக்கு ஆளுநர் பதவியை பெற்று தந்து அவர்களை மன நிறைவு அடைய செய்வதற்காக சில மாநிலங்களின் ஆளுநர்களை பதவி விலகும்படி கேட்டுக் கொண்டது . இதன்படி குஜராத் , உத்தர பிரதேசம் , மேற்கு வங்களம் , சத்தீஷ்கர் , மற்றும் நாகலாந்து ஆகிய ஐந்து மாநிலங்களின் ஆளுநர்கள் ராஜினாமா செய்தனர் . சில மாநிலங்களின் ஆளுநர்கள் வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டனர் .

புதிய ஆளுநர்கள் பட்டியல் வருமாறு

குஜராத்                            ஓம்பிரகாஷ் கோஹ்லி

உத்தர பிரதேசம்          ராம்நாயக்

மேற்கு வங்களம்        கேசரிநாத் திரிபாதி

சத்தீஷ்கர்                       பல்ராம் தாஸ்

நாகலாந்து                     பத்மநாப பாலகிருஷ்ணா ஆச்சர்யா


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media