மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரான மேனகா காந்தி , நேற்று அளித்த பேட்டியில் " கொடிய குற்றங்கள் செய்த சிறுவர்களை வயதுக்கு வந்த இளைஞர்களாக கருதி தண்டனை அளிக்க வேண்டும் " என்றார் .
அவர் கூறுகையில் , " காவல் துறையினர் அளித்த அறிக்கையின் படி 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்களை 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களே செய்துள்ளனர் . இந்த 16 வயது சிறுவர்கள் தங்களுக்கு சட்டத்தில் கடுமையான தண்டனை எதுவும் இல்லை என்பதை அறிந்து கொண்டு தைரியமாக குற்றங்கள் செய்கின்றனர் . இந்த வழக்குகளில் அவர்களை வயதுக்கு வந்த இளைஞர்களாக பார்த்து தண்டனை கொடுத்தால் , அது அவர்களுக்கு பயத்தை அளிக்கும் " என்றார் .
முந்தைய ஆட்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரான கிரிஷ்னா திராத் இதே கோரிக்கையை முன்வைத்தார் . ஆனால் பல அரசு சாரா அமைப்புகள் மற்றும் , குழந்தைகள் அமைப்பு இது குழந்தைகளின் உரிமைக்கு எதிரானதாக இருக்கும் என கடும் எதிர்ப்பை தெரிவித்தனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.