உலக கோப்பை கால்பந்து தொடர் நிறைவு பெற்றது . இந்த தொடரின் அதிக கோல் அடித்த வீரருக்கான விருதை கொலம்பியா அணியின் ஜெம்ஸ் ரோட்ரிகஸ் வென்றார் . சிறந்த வீரருக்காக கொடுக்கப்படும் கோல்டன் பால் விருதை மெஸ்ஸி கைப்பற்றினார் .
இந்நிலையில் அர்ஜெண்டினா அணியின் முன்னால் நட்சத்திர வீரர் மாரடோனா கூறுகையில் , " நான் மெஸ்ஸிக்கு வானத்தையும் கொடுத்து இருப்பேன் , ஆனால் இந்த விருதுக்கு அவர் தகுதியானவர் இல்லை , இது எல்லாம் சிலர் விளம்பரத்துக்காக அவரை ஜெயிக்க வேண்டும் எனக் கருதி , அந்த விருதை அவரிடம் கொடுத்துள்ளனர் . இது நியாயமற்றது . மேலும் ரோட்ரிகஸ் தான் இந்த தொடரின் சிறந்த வீரர் " என்றார் .
அர்ஜெண்டினா சார்பாக லீக் போட்டிகளில் ஜொலித்த மெஸ்ஸி , 4 கோல்களை அடித்தார் . பின்னர் விளையாடிய நாக் அவுட் போட்டியில் கோல் எதுவும் அடிக்கவில்லை . ஆனால் அனைத்து போட்டிகளிலும் தன்னால் முடிந்த வரை கோல் போட முயன்றார் . ஆனால் எதிரணியினர் அவருக்கென்று தனி திட்டம் வகுத்ததால் அவரால் அதை உடைக்க முடியவில்லை . இந்நிலையில் மரடோனாவின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.