நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்பது தான் தேர்தல் சமயத்தில் பல கட்சிகளின் வாக்குறுதியாக இருக்கும் .பிறகு ஆட்சிக்கு வந்த பிறகு அதனை மறந்து விடுவார்கள் . ஆனால் தமிழக முதல்வர் கொடுத்த வாக்கை மறக்கவில்லை. இப்போது அவர் ஏழைகளுக்கு கட்டிட வீடுகள் கட்டு தரும் முடிவில் உள்ளார். அரசு சார்பில் புதிய வீட்டு மனைகளும், புதிய அடுக்குமாடி வீடுகளும் ஏழைகளுக்காக கட்டி தரப்படும் என்றார்.
இந்த அறிவிப்பை தமிழக முதல்வர் இன்று பேரவையில் அறிவித்தார். திருச்சி மாவட்டம் நவல்பட்டில் 63 ஏக்கரில் 20 கோடி ரூபாய் செலவில் 1360 வீட்டு மனைகள் அமைக்க உள்ளார்கள். மோடி அரசு 2022 க்குள் அனைவருக்கும் வீடு என்று அறிவித்து உள்ளது. எனவே மத்திய மாநில அரசுகளின் தொலைநோக்கு திட்டம் 2023 என்னும் திட்டத்தின் கீழ் 825 கோடி ரூபாய் செலவில் 10000 அடுக்குமாடிகள் கட்ட உள்ளார்கள். இதற்கான செலவில் 50 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசும், 10 சதவீதம் வீட்டின் உரிமையாளரும் ஏற்று கொள்ள வேண்டும்.
அம்மா அடுக்குமாடி கட்டித்தரது எல்லாம் ஒகே தான், அப்படியே அது இடிந்து விழாமையும் பார்த்துக்கோங்க !!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.