ஆஸ்திரேலியாவின் குயின்ஃஸ்லாந்தைச் சேர்ந்தவர் கெயிலின் மண் .இவர் தொலைந்து போன எம்.எச் - 370 விமானத்தில் தனது சகோதரனையும் , இப்போது ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்.எச் 17 விமானத்தில் தனது மகளையும் இழந்து பரிதாபமான சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளார் .
எம்.எச் - 370 விமானத்தில் இவரது சகோதரனும் அவரது மனைவியும் பயணம் செய்யும் போது அந்த விமானம் தொலைந்து போனது . இதனால் மிகுந்த துயரத்தை அடைந்தனர் அவரது குடும்பத்தினர் . இந்த துயரம் ஆறுவதற்குள் , நேற்று இவரது மாற்றான் மகள் மரி ரிஃஸ்க் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இறந்து போன தகவல் கிடைத்துள்ளது . இதனால் இவர்களின் துயரம் இன்னும் அதிகரித்துள்ளது .
இவ்வாறு இரு துயரங்கள் ஒரே நிறுவனத்தால் தனது குடும்பத்திற்கு நடந்த போதும் அவர் மலேசியன் ஏர்லைன்ஸ் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.