இந்திய மொபைல் மார்க்கெட்டில் இப்போது அதிகமாக கிடைக்கும் பொபைல்கள் அனைத்திலும் விண்டோஸ் அல்லது ஆண்ட்ராய்ட் அல்லது ஐ-ஓ.எஸ் மட்டுமே காண முடிகிறது . அதிலும் ஆண்ட்ராய்ட் அனைவரும் விரும்பும் வகையில் உள்ளதால் அதிகம் பேர் அந்த மொபைல் தான் பயன்படுத்துகின்றனர் .
இந்த மூன்று ஓ.எஸ் தவிர வேறு இல்லையா ??
இருக்கிறது !!! ஆம் , அதுவும் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதத்தில் இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் . புதிதாக வர உள்ள ஓ.எஸ் ஜொல்லாவின் சேயில்பிஷ் , பயர்பாக்ஸ் மற்றும் உபுண்டுவின் ஓ.எஸ் .
ஜொல்லாவின் சேயில்பிஷ் !!
இந்த ஓ.எஸ் வெளிநாடுகளில் இருந்தாலும் இனிமேல் தான் இந்தியாவுக்கு வர இருக்கிறது . ஆண்ட்ராய்ட் மொபைலில் இருப்பது போன்று பட்டன்கள் மூலம் ஆப்சன்களை தேர்வு செய்யாமல் கை அசைவுகளினால் வரைவது மூலம் நமக்கு வேண்டியவற்றை தேர்வு செய்யலாம் . இதில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் அனைத்தும் இயங்கும் .
பயர்பாக்ஸ் ஓ.எஸ் :
இந்த ஓ.எஸ் ஆண்ட்ராய்ட் போன்று தோற்றமளித்தாலும் விலை குறைந்த மொபைல்களிலும் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது . இதன் மூலம் அனைவரும் பயர்பாக்ஸ் ஓ.எஸ் பயன்படுத்தும் வகையில் விலை குறைவாக இந்த மொபைல்கள் கிடைக்கும் . இந்த மொபைலில் பயன்படுத்தும் அனைத்து அப்ளிகேஷ்னு மிக குறைந்த மெமரியில் இருக்கும் .
உபுண்டு ஓ.எஸ்
இந்த ஓ,எஸ் லினக்ஸ் பயன்படுத்திய அனைவருக்கும் எளிதாக இருக்கும் . அப்படியே மொபைலுக்கு மாற்றி உள்ளார்கள் . மேலும் ஆண்ட்ராய்ட் ஓ.எஸ் லினக்ஸ் பயன்படுத்தி தான் உருவாக்கப் பட்டது என்பதால் ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் அனைவரும் இதை பயன்படுத்தலாம் என்று கூறுகின்றனர் . ஆனால் இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை !!!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.