BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 19 July 2014

அவசரத்தில் பயன்படுத்த வேண்டிய 110 விதியை 115 முறை பயன்படுத்திய ஜெயலலிதா - ராமதாஸ் கடும் தாக்கு ...


நேற்று தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற்று வந்தது . இந்த சபையில் சபாநாயகர் முதல்வரை 110 விதியை 115 முறை பயன்படுத்தியதாக கூறி முதல்வரை பாராட்டினார் . ஆனால் இது அவையின் விதிக்கு அப்பாற்பட்டதாகவும் , விதியை கேலிக் கூத்தாக்குவது போன்று இருப்பதாகவும் கூறி பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை விட்டுள்ளார் .

அந்த அறிக்கையில் , " தமிழக அரசு சார்பில் 54 துறைகள் உள்ளன . இந்த துறைகளின் மானியக் கோரிக்கைகளை அந்த அந்த துறைகளின் அமைச்சர்கள் அறிவிப்புகளாக வெளியிடுவர் . இது தான் மரபு . ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சர்கள் பெயருக்கு சில அறிவிப்புகளையும் , மற்ற முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா 110 விதியை பயன்படுத்தி வெளியிட்டு வருகிறார் .

இந்த 110 விதி  பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருள் பற்றி அவசர அறிவிப்பு வெளியிட வேண்டுமானால் இந்த விதியை பயன்படுத்தி வெளியிடலாம் . அந்த விதி மூலம் கொண்டு வரப்பட்ட சட்டத்தின் மீது எந்த விவாதமும் இருக்க கூடாது என்பது விதி . இதை அரிதாக பயன்படுத்த வேண்டும் என்பதே மரபாக இருக்கிறது .

முதல்வர் பதவியேற்றபின் இந்நாள் வரை 115 முறை இந்த விதியை பயன்படுத்தி உள்ளார் . இந்த விதியை பயன்படுத்துவது என்பது முதல்வரின் உரிமை என்ற போதிலும் எப்போதாவது பயன்படுத்த வேண்டிய விதியை மூன்று ஆண்டுகளில் பயன்படுத்துவது என்பதும் அதை சபாநாயகர் பாராட்டி அறிக்கை வாசிப்பது என்பது விதிகளை கேலிக் கூத்தாக்கும் செயல் " என்று குறிப்பிட்டு இருந்தார் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media