நேற்று முன்தினம் நெதர்லாந்தில் இருந்து கோலாலம்பூர் நோக்கி சென்று கொண்டு இருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஏதோ ஒரு படையினால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் பயணம் செய்த 295 பேரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது உக்ரைன் அருகே நடந்தது. இந்த தாக்குதலுக்கு ரஷியாவை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் தான் காரணம் என உக்ரைன் அரசால் குற்றச்சாட்ட பட்டு வருகிறது. இந்த விபத்து பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என உலக தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்று இன்னும் தெரியவில்லை. ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும், உக்ரைன் அரசு படையினரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குற்றம்சாட்டி கொள்கிறார்கள். விமானத்தில் இருந்த 2 கறுப்பு பெட்டிகள் மீட்க பட்டு உள்ளது. அவை ரஷிய அரசுக்கு அனுப்பபட்டு உள்ளது. அதனை பார்த்த பிறகு விமானத்தில் நடந்த கடைசி நேர நிகழ்வுகள் வெளி வரலாம்.
இதன் மூலம் குற்றவாளி பற்றி ஏதேனும் துப்பு கிடைக்கலாம்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.