ஆந்திர பிரதேசம் மேற்கு கோதவரி மாவட்டத்தில் உள்ள அரசு விடுதியில் தங்கி இருந்த மாணவிகளை விபச்சாரத்தில் தள்ள முயற்சித்த 5 பேர் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர் . கைது செய்ய்ப்பட்ட ஐவரில் ஒருவர் பெண் .
ஹாஸ்டல் வார்டன் மீது சாட்சியங்களை அழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது . காப்பாற்றப்பட்ட மாணவிகள் அனைவரும் மாவட்ட தலைமை குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளின் கீழ் பாதுகாப்பாக உள்ளனர் .
கலெக்டருக்கு ஒரு மொட்டைக் கடுதாசி இந்த பிரச்சனை குறித்து வந்ததால் அவர் போலிஸை எஸ்.சி/எஸ்.டி மாணவிகள் விடுதிக்கு ரேய்ட் போக உத்தரவிட்டார் . அப்போது அந்த ஐந்து நபர்களும் மாட்டிக் கொண்டனர் .
மாணவிகள் அனைவரும் எட்டாம் வகுப்பு படிப்பவர்களும் 14 வயதுக்கு கீழே இருப்பவர்களாக தான் இருந்தனர் . குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நிர்பயா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.