கிரிக்கெட் போட்டிகள் ஆரம்ப காலத்தில் டெஸ்ட் போட்டிகளாக தான் தொடங்கின , அதன் பின்பு அதில் முடிவு கிடைக்கவில்லை என்பதால் ஒரு நாள் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. முதலில் 60 ஒவர்கள் கொண்டதாகவும் அதன் பின்பு 50 ஒவர்கள் கொண்டதாகவும் குறைக்கப்பட்டது. அதன் பின்பு டி20 என 20 ஒவர் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் எந்த அணிக்கும் அதில் அனுபவம் இல்லை.
இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பை தென் ஆப்பிரிக்காவில். இந்தியா அணியோ மிக மோசமான நிலையில் இருந்தது. அனுபவ வீரர்களான சச்சின், திராவிட், கங்குலி ஆகியோர் இதில் கலந்து கொள்ளவில்லை என முடிவு செய்தனர். அதனால் புதிய கேப்டனாக விக்கெட் கீப்பர் தோனி அறிவிக்கப்பட்டார். சேவாக், யுவராஜ், ஹர்பஜன் தான் இந்திய அணியில் இருந்த அனுபவ வீரர்கள்.
ஒவ்வொரு போட்டியிளும் பல சவால்களை சந்தித்து இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இறுதி போட்டி பரம் எதிரி பாகிஸ்தானுடன். எப்படியாவது வென்றாக வேண்டும் என்னும் கட்டாயம். முதலில் பேட் செய்த இந்திய அணீ 157 ரன்கள் எடுத்தது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் எளிதான இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. அந்த அணியின் பேட்டிங் எதிர்ப்பார்த்ததை போல் செயல்படவில்லை. இதனால் கடைசி ஒவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் நிலை வந்தது.
அனைவரும் ஹர்பஜன் பந்து வீச வருவார் என எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத படி ஜோகிந்தர் ஷர்மா வந்தார். முதல் பந்தே வைட் ஆனது. அதன் பிறகு டாட் பந்து. 2 வது பந்து சிக்ஸூக்கு பறந்தது. தோனியின் முடிவு தவறாகி விடுமோ என பலரும் எதிர்ப்பார்த்தனர். 3 வது பந்தில் இந்தியா வெற்றி பெற்றது. மிஸ்பா ஹுல் ஹக் கேட்ச் ஆகி அவுட் ஆனார். இதே செப்டம்பர் 24 ஆம் தேதி இந்திய அணி முதல் டி20 உலக கோப்பையை கைப்பற்றியது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.