காஸா போருக்குத் தூண்டுகோலாக அமைந்த 3 இஸ்ரேல்
சிறார்களின் படுகொலைக்குக் காரணமானவர்கள் எனக் கூறப்படும் இருவரை இஸ்ரேல்
பாதுகாப்புப் படையினர் (ஐ.டி.எஃப்.) சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து ஐ.டி.எஃப். செய்தித் தொடர்பாளர் பீட்டர் லெர்னர்
கூறுகையில், ""சிறுவர்கள் கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட அந்த
இருவரும் மேற்குக் கரைப் பகுதியில் பதுங்கியிருந்தனர். அவர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்ய முயன்றபோது நிகழ்ந்த
துப்பாக்கிச் சண்டையில், இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்'' என்று
தெரிவித்தார். சுட்டுக் கொல்லப்பட்ட மர்வான் கவாஸ்மே (29), அமர் அபு ஆஸ்ஷா (32) ஆகிய
அந்த இருவரும், மேற்குக் கரையின் ஹீப்ரான் பகுதியிலுள்ள ஒரு வீட்டில்
பதுங்கியிருந்ததாக இஸ்ரேல் உளவுத்துறை "ஷின் பெட்' தெரிவித்தது.
சிறார்கள் படுகொலையில் சந்தேகிக்கப்படும் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை, ஹமாஸ் அமைப்பும் உறுதி செய்துள்ளது. இஸ்ரேலிய சிறார்கள் படுகொலையில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று தொடக்கத்தில் ஹமாஸ் மறுத்து வந்தது. எனினும், அந்தச் சிறார்களைக் கடத்துவதற்கு நிதியுதவி அளித்ததையும், அவர்களைப் படுகொலை செய்ததையும் அந்த அமைப்பு பிறகு ஒப்புக் கொண்டது.
அந்தப் படுகொலையின் தொடர்ச்சியாக, 50 நாள்களாக நிகழ்ந்த இஸ்ரேல் - ஹமாஸ் சண்டையில், 2,100-க்கும் மேற்பட்டேர் உயிரிழந்தனர். எகிப்து தலைநகர் கெய்ரோவில் இஸ்ரேல் - ஹமாஸ் பிரதிநிதிகளிடையே நடைபெற்ற மிக நீண்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, முக்கிய பிரச்னைகளுக்குத் தீர்வு எட்டப்படாமலேயே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
தற்போது இஸ்ரேல் சிறார்கள் படுகொலை தொடர்பாகத் தேடப்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதால், காஸா பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் வாய்ப்பு அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.