பீகாரில் உள்ள பஞ்சாயத்து ஒன்றில் கற்பழிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணை 2 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக பெற்றுக் கொண்டு கருவை கலைக்கச் சொல்லி பஞ்சாயத்து நடுவர் தீர்ப்பளித்துள்ளார் .
பீகாரின் சுபன்கார்ப்பூர் கிராமத்தில் இருக்கும் பஞ்சாயத்து சார்பாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது . இந்த கிராமம் க்ண்டி காவல் நிலையத்திற்கு கீழ் வரும் . இந்த காவல் நிலையத்தில் அந்த சிறுமியின் பெற்றோர் பூகார் அளித்துள்ளனர் .
இது குறித்து போலிஸ் அதிகாரி கூறுகையில் , " நாங்கள் அவர்கள் அளித்த பூகாரின் பேரில் குற்றவாளியை தேடிக் கொண்டு இருக்கிறோம் . மேலும் அந்த ப்ஞ்சாயத்துக்கு எதிரான நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்வோம் " என்றார் .
சிறுமியின் பெற்றோர் கூறுகையில் , " பஞ்சாயத்து எங்களிடம் 2 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு செல்லும்படி கூறினர் . ஆனால் நாங்கள் அதற்கு இணங்கவில்லை . எங்களுக்கு குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று கூறினர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.