மோடி புதன்கிழமை பெரிய குடிபானங்கள் தயாரிக்கும் பெப்ஸி , கோக் நிறுவனங்களிடம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க தங்கள் பானங்களில் ப்ருட் ஜூஸையும் சேர்த்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்தார் .
மோடி அளித்த பேட்டியில் , " இலட்சக்கணக்கான மக்கள் பெப்ஸி மற்றும் கோக்கோ கோலா வாங்குகின்றனர் . நான் இந்த நிறுவனங்களிடம் 5 சதவீதம் இயற்கை பழங்களின் சாறுகளை உபயோகிக்க கோரிக்கை வைத்து உள்ளேன் . அவர்கள் அவ்வாறு செய்தால் நமது விவசாயிகளுக்கு இலாபம் அதிகமாக கிடைக்கும் . அவர்கள் தங்கள் பழங்களை தூக்கிப் போட வேண்டிய அவசியம் இல்லை " என்றார் .
இது போன்று மோடியின் உணவு அமைச்சகமும் இது போன்று கோரிக்கை ஒன்றை வைத்து இருந்தது . இவர்கள் கடந்த மாதம் பெப்ஸிகோ நிறுவனத்தை தங்களின் பானங்களில் சக்கரையின் அளவை குறைக்கும் படி கேட்டுக் கொண்டனர் .
உலகில் பழங்கள் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா , போதுமான சேமிப்பு வசதி இல்லாததால் பல பழங்கள் தூக்கி வீசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.