இயக்குனர் ஷங்கர் 2 வருடமாக எடுத்து வரும் படம் 'ஐ'. இந்த படத்தை இந்தியா முழுவதும் எதிர்பார்த்து வருகிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று நடைபெற்றது. அதில் ஹாலிவுட் நாயகன் அர்னால்டு, நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். அதனால் இந்த விழாவே பெரிய ஹிட்டானது. இதில் படத்தின் டீசரையும் வெளியிட்டார்கள்.
அர்னால்டு கலந்து கொண்ட விழா, ஷங்கரின் படம் என்பதால் இந்த டீசர் உலகம் முழுவதும் பிரபலமானது. இதனால் இதனை பலரும் யூடுயூபில் பார்த்து வந்தார்கள். இப்போது வரை அதனை 60 லட்சம் பேர் பார்த்து உள்ளார்கள். ஒரு தமிழ் படத்தின் டீசரை இத்தனை பேர் பார்ப்பது இது தான் முதல் முறையாகும். டீசர் வந்து இப்போது தான் 10 நாட்கள் ஆகி உள்ளது. இன்னும் படம் வருவதற்கு ஒரு மாதத்துக்கு மேல் ஆகும். அதற்குள் இதனை ஒரு லட்சம் பேர் பார்த்து புது சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.