பெண்களுக்கு அடிக்கடி மிஸ்ட் கால் கொடுத்து தேவை இல்லாமல் தொல்லை கொடுத்தால் , அந்த செயலில் ஈடுபடும் நபருக்கு சிறை தண்டனை கொடுக்கப்படும் என பீகாரில் புது உத்தரவு போடப்பட்டுள்ளது .
போலிஸ் தலைமை அதிகாரி அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் , இது போன்று மிஸ்ட் கால் குறித்த பூகார்களை காவல் அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் எடுத்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் .
பெண்களுக்கு தொடர்ந்து மிஸ்ட் கால் கொடுப்பது ஒரு பயங்கரமான குற்றம் . இது அவர்களின் மன அமைதியைக் கெடுக்கிறது . எனவே நாங்கள் அதை ஒரு குற்றமாக எடுத்து செக்சன் 354இன் கீழ் வழக்கு பதிவு செய்ய திட்டமிட்டு இருக்கிறோம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .
ஒன்று இரண்டு முறை மிஸ்ட் கால் கொடுத்தால் விட்டுவிடும் படியும் தொடர்ந்து மிஸ்ட் கால் கொடுத்து தொல்லை கொடுத்தால் பூகாராக எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.