கோவை மாநகராட்சி மேயர் இடைத்தேர்தலில் 2 வாக்குச்
சாவடிகளில் பாஜகவுக்கு ஒரு வாக்கு கூடக் கிடைக்கவில்லை. அதேசமயம், 10
வாக்குச் சாவடிகளில் அதிமுகவை விட பாஜக கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது. கோவை மாநகராட்சி மேயர் இடைத்தேர்தல் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகின. மொத்தம் 16 பேர் போட்டியிட்ட இத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்
ப.ராஜ்குமார் 4.20 லட்சம் வாக்குகளைப் பெற்று, 2.91 லட்சம் வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் ஆர்.நந்தகுமார் 1.29
லட்சம் வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பெற்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.பத்மநாபன், காந்திய மக்கள் இயக்க வேட்பாளர் டென்னிஸ் கோவில்பிள்ளை உள்ளிட்ட 14 வேட்பாளர்கள் குறைந்த வாக்குகளைப் பெற்று டெபாசிட் தொகையை இழந்தனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இரண்டாமிடத்துடன் டெபாசிட் திரும்பப் பெற்ற பாஜக வேட்பாளர் ஆர்.நந்தகுமார், கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட 86-ஆவது வார்டில் 2 வாக்குச் சாவடிகளில் ஒரு வாக்கு கூடப் பெறவில்லை.
இதே பகுதியில் உள்ள சில வாக்குச் சாவடிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே பாஜக வேட்பாளர் வாக்குகளைப் பெற்றுள்ளார். பாஜக முன்னிலை: மாநகராட்சியின் 56-ஆவது வார்டில் 2 வாக்குச் சாவடிகளில் அதிமுக வேட்பாளர் ப.ராஜ்குமார் பெற்றதை விடக் கூடுதல் வாக்குகளை பாஜக வேட்பாளர் பெற்றுள்ளார். இதேபோல மொத்தம் 8 வாக்குச் சாவடிகளில் பாஜக வேட்பாளர் ஆர்.நந்தகுமார், அதிமுக வேட்பாளர் ப.ராஜ்குமாரை விடக் கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒருசில அதிமுக கவுன்சிலர்களின் வார்டுகளில் பாஜக வேட்பாளர் கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளதால், சம்பந்தப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.