வாஷிங்டன், செப். 29: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி
நிறுவனமான நாஸா செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ள கியூரியாசிட்டி ரோவர்
தனது முக்கிய செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.
நாஸாவின் கியூரியாசிட்டி திட்டத் துணை ஆய்வாளர் அஸ்வின் வாஸவடா இது குறித்து தெரிவித்தது: ஷார்ப் எனப் பெயரிடப்பட்டுள்ள ஐயாயிரம் மீட்டர் உயரமுள்ள மலை குறித்து ஆராய்வதே ரோவரின் பிரதான பணியாக இருக்கும். அதன் முதல் கட்டமாக, அந்த மலை அடிவாரத்தில் 2.6 அங்குல அளவுக்கு நிலப் பகுதி தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த கட்டங்களில் மலையின் பிற பகுதிகள் ஆராயப்படும். பிற பகுதிகளை ஒப்பிடும்போது, மலையின் மேல் பகுதி காலத்தில் பிந்தையதாகும். எனவே மலைகளின் பல்வேறு பகுதிகளை ஆராய்வதன் மூலம் அந்த நிலப்பகுதி குறித்து பல விஷயங்களை அறிய முடியும் என்று கூறினார்.
"ரோவர்' 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் செவ்வாய் கிரகத்தில் இறங்கியது. ஷார்ப் மலைப்பகுதியில் தனது ஆராய்ச்சியைத் தொடங்கும் முன்னர், ஆய்வுக்கலன் தரையிறங்கிய நிலப்பகுதியில் முதல் ஆய்வுகளை மேற்கொண்டது.
அங்கிருந்த பாறை மாதிரிகளை ஆய்வு செய்ததன் மூலம், 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதியில் ஏரி ஒன்று இருந்துள்ளது தெரிய வந்தது. மேலும் நுண்ணுயிர்கள் இருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் அந்த ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து, பிரதான இலக்கான ஷார்ப் மலையை நோக்கி, ரோவர் ஆய்வுக்கலன் நகரத் தொடங்கியது.
செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய இடத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த மலையை அடைய "கியூரியாசிட்டி ரோவருக்கு' சுமார் பதினைந்து மாதங்கள் ஆயிற்று. இடையே பல்வேறு பகுதிகளில் பாறை மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.