அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சிறைத்
தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்தும், தங்களது வேதனையை வெளிப்படுத்தும்
விதமாகவும் தமிழ்த் திரையுலகம் சார்பில் செவ்வாய்க்கிழமை (செப்.30) மௌன
உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.
தமிழ்த் திரையுலக அமைப்பு நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கச் செயலாளர் டி.சிவா, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் சி.கல்யாண், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், தயாரிப்பாளர்கள் கேயார், தாணு, இப்ராஹிம் ராவுத்தர், ஆர்.வி.உதயகுமார், அபிராமி ராமநாதன், பிரமிட் நடராஜன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பின்னர், தமிழ்த் திரையுலக அமைப்புகளின் சார்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து தமிழ்த் திரையுலகின் சார்பில் வருத்தத்தையும், உணர்வுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வேதனையை வெளிப்படுத்தும் வகையில் மௌன உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் வளாகத்தின் முன்பு நடைபெற உள்ள இந்த மௌன உண்ணாவிரதப் போராட்டம், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த் திரையுலகின் பல்வேறு அமைப்புகள் கலந்து கொள்கின்றன. எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த மௌன உண்ணாவிரதப் போராட்டம், ஒட்டு மொத்த தமிழ்த் திரையுலகத்தின் அன்பின் வெளிப்பாடு, நன்றி உணர்வின் வெளிப்பாடு என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்புகள் ரத்து: திரையரங்குகள் செயல்படாது
மௌன உண்ணாவிரதப் போராட்டத்தில் திரையுலகினர் அனைவரும் கலந்து கொள்வதால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நடைபெறவுள்ள படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்துத் திரைப்படப் பணிகளும் செவ்வாய்க்கிழமை நிறுத்தப்படுகின்றன. தமிழகம் முழுவதும் திரையரங்குகளின் காட்சிகள் மாலை 6 மணி வரை ரத்து செய்யப்படுகின்றன என்று தமிழ்த் திரை அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.