ஐரோப்பியா கண்டத்தில் உள்ள லிதுவேனியா என்னும் நாட்டில் உள்ள ஒரு நகரத்தில் சாலைகள் எதுவும் ஒழுங்காக இல்லாமல் குண்டும் குழியுமாக இருந்துள்ளன. இதனை சரி செய்யும் படி ஒரு அமைப்பினர் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்து உள்ளனர். ஆனால் அரசாங்கமோ அது எப்போதும் போல் வரும் கோரிக்கை என அதனை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். ஆனால் அந்த அமைப்பில் இருந்த இரு இளைஞர்கள் அந்த பிரச்சனையை உலக மக்களின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
அந்த சாலைகளை வித்தியாசமாக புகைப்படம் எடுத்து சமூக வலைதலங்களில் ஏற்றினர். இது உலகம் முழுவதும் பிரபலமானது. சாலையில் ஒட்டை விழுந்து தண்ணீர் தேங்கி நிற்பதை பார்த்ததும் இருவர் மீன் பிடிக்க ஒடி வருவது, குளிக்க வருவது போன்ற புதிய கற்பனைகளுடன் போட்டோக்களை எடுத்தனர். இது உலகம் முழுவதும் பிரபலமானதால் தங்கள் நாட்டின் மானம் போவதை உண்ர்ந்த அரசாங்கம் இப்போதும் சாலைகளை அமைக்க உத்தரவிட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.