போலியோ நோயை ஒழித்தது போன்று பல இலட்ச மக்களின் உயிர்களை வாங்கும் அம்மை போன்ற நோய்களை ஒழிக்க ஒரு இலட்சிய இயக்கம் தொடங்கப்படும் என சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷா வர்தன் தெரிவித்தார் .
மத்திய அரசு அம்மை நோயை வருகிற 2015க்குள் நீக்கவும் , ஜெர்மானிய அம்மை என்றழைக்கப்படும் ருபெல்லா நோயை மற்றும் கலா அசார் என்று அழைக்கப்படும் கருப்பு காய்ச்சல் ஆகிய நோயை 2015 க்குள் தடுத்து நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார் .
சின்ன அம்மையை 1977 ஆம் ஆண்டிலும் , போலியோவை 2014 ஆம் ஆண்டிலும் முற்றிலுமாக ஒழித்தோம் . அது போல அனைத்து நோய்களும் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று அவர் பேட்டியில் தெரிவித்தார் .
ஆயுர்வேதா மற்றும் யோகா இணைந்து ஆயுஷ் என்றழைக்கப்படும் மாற்று முறை மருத்துவம் இந்த அரசின் கீழ் நன்றாக வலுப்படுத்தப்படும் என தெரிகிறது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.