கபடியில் ஆறு முறை ஆசிய சாம்பியன்களான இந்திய அணி தங்களின் விளையாட்டு எதிரியாக பார்க்கப்படும் பாகிஸ்தான் அணியுடன் மோதியது . 23 - 11 என்ற புள்ளி கணக்கில் பாகிஸ்தானை வென்று இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது . இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப் போட்டிகள் அனைத்தையும் வென்ற பெருமையைப் பெற்றுள்ளது .
இந்திய அணி ஆசியப் போட்டிகளில் கபடியைச் சேர்த்ததில் இருந்து இந்தியா தான் தங்கம் வென்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது . ஆசியப் போட்டிகளில் 1990 ஆம் ஆண்டு கபடி சேர்க்கப்பட்டது .
இதேப் போன்று இந்தியப் பெண்கள் அணியும் தென் கொரியாவை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.