சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தமிழ்த் திரையுலகினர் மவுன உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு இன்று (புதன்கிழமை) காலை 9 மணி அளவில் தமிழ்த் திரையுலகினர் மவுன உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இதில், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், கேயார், சத்யராஜ், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா, பிரபு, விக்ரம் பிரபு, சிபிராஜ், அபிராமி ராமநாதன், நடிகை சச்சு, நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா உள்ளிட்ட நடிகர் நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த போராட்டம் தேவையா என்பது தான் நமது முதல் கேள்வியாக இருக்கும். ஜெயலலிதா என்ன ஏதும் செய்யாமல் அவர் மீது தவறான வழக்கு போட்டு குற்றம்சாட்டப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளாரா. அது கண்டிப்பாக இல்லை. அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கு என்பது உண்மையானது ஆகும். முதல்வராக இருந்த போது ரூ.1 சம்பளமாக பெற்றவரால் எப்படி 66 கோடி சொத்து சேர்க்க முடியும். இந்த வழக்கை 18 ஆண்டுகளாக இழுத்தடித்துள்ளார். இதுவே ஒரு பெரிய குற்றம் ஆகும்.
இப்படிப்பட்ட ஒரு குற்றவாளிக்கு எதற்காக திரையுலகினர் ஆதரவாக இருக்கிறார்கள். அப்படியெனில் அவர்கள் ஜனநாயகத்துக்கு எதிராகவும் ஊழலுக்கு ஆதரவாகவும் உள்ளார்கள். இப்படிப்பட்டவர்களை நாம் எப்படி ஒரு நல்ல ஹீரோவாக எடுத்துக்கொள்ள முடியும். இலங்கை தமிழர்களை கொன்று குவித்த போது அமைதியாக இருந்து விட்டு வெறும் சம்பிரதாயத்துக்காக கடைசியில் ஒரு போலி உண்ணாவிரதத்தை நடத்துவதை வழக்கமாக கொண்டு இருந்தார்கள். இப்போது மட்டும் முதல் ஆளாக போராட்டத்தை தொடங்கி இருப்பது ஏன் என்று தெரியவில்லை.
ஜெயலலிதாவுக்கு பயந்து போராட்டம் நடத்துகிறார்களா. போராட்டம் நடத்தாவிட்டால் ஜெயலலிதா படங்களை வெளியிட விடமாட்டார் என்னும் பயமா. இதில் விக்ரம், சூர்யா,கார்த்தி, சிவகார்த்திகேயன் , சத்யராஜ் போன்றவர்கள் கலந்து கொண்டது தான் கேவலமான விஷயம். இதன் மூலம் அவரது ரசிகர்கள் ஊழலுக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்புள்ளது. நாம் சந்தோஷப்பட வேண்டிய ஒரு விஷயம் இதில் ரஜினி, கமல், விஜய் , அஜீத் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பது மட்டும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.