இந்தியாவில் இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்து கொண்டு இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே . ஆனால் இந்த அளவுக்கு இண்டர்நெட் பயன்பாடு மக்களின் வாழ்க்கையில் அழுத்தம் கொடுத்து இருக்குமா என்பதை இந்த ஆய்வின் முடிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம் .
46 சதவீத இந்திய பயனாளர்கள் தினமும் 6 மணி நேரமோ அதற்கு மேலாக இண்டர்நெட் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர் . இன்னும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக 82 சதவீதம் பயன்படுத்துபவர்கள் இண்டர்நெட் கட் செய்யப்பட்டு விட்டால் தாங்கள் தனியாக இருப்பது போன்றும் ஒரு விதமான பதற்றமும் ஏற்படுவதாக தெரிவித்தனர் .
இந்தியா , பிரான்ஸ் , ஜெர்மணி , சிங்கப்பூர் , அமெரிக்கா , இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து 9,417 மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது . இந்த ஆய்வில் கலந்து கொண்ட பாதிக்கு மேற்பட்ட இந்தியர்கள் தங்களால் இண்டர்நெட் இல்லாமல் 5 மணி நேரத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என தெரிவித்துள்ளனர் .
அதிலும் பெண்கள் தான் ஆண்களை விட அதிக அளவில் பதற்றம் அடைவதாக தெரிவிக்கிறது ஆய்வு . மேலும் டேப்ளட் மற்றும் ஸ்மார்ட் போன்கள் டிவிக்களின் இடத்தைப் பிடித்து வருவதாக கூறினர் . இந்தியாவில் 43 சதவீதம் பேர் இண்டர்நெட்டிற்காக டிவியை விட்டுக் கொடுக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.