நமக்கு இன்றைய உலகத்தில் பாஸ்வேர்ட் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது . நாம் எதற்குள் உள்ளே செல்ல வேண்டும் என்றாலும் இந்த பாஸ்வேர்ட் தான் முக்கிய பங்காற்றுகிறது . சிலர் பாஸ்வேர்டை எளிதாக வைத்துக் கொண்டு ஹேக்கர்களின் வலைகளில் எளிதாக சிக்கி விடுகின்றனர் , எனவே அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு பலமான பாஸ்வேர்ட் அமைக்க சில வழிகள் :
உங்களின் அனைத்து பாஸ்வேர்ட்களும் 8 கரக்டர்கள் இருக்க வேண்டும் என்று அவர்கள் குறிப்பிடுவர் . ஆனால் 14 வைத்தால் நன்றாக இருக்கும் , 25 வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் .
எழுத்துகள் , எண்கள் என அனைத்தையும் கலந்து பாஸ்வேர்டை அமைக்க வேண்டும் . apple123 என்பதை விட AppLe@12! என்பது பாதுகாப்பாக இருக்கும் .
உங்களுக்கு பிடித்த வார்த்தைகளின் நடுவே சில எண்கள் மற்றும் புள்ளிகளை இணைத்து விடுங்கள் .
உங்களுக்கு தெரிந்த வாக்கியங்களின் முதல் எழுத்துகளையோ , கடைசி எழுத்துக்களையோ எடுத்து ஒன்றாக பாஸ்வேர்ட் ஆக வைத்துக் கொள்ளுங்கள் .
O க்குப் பதிலாக 0 பயன்படுத்தலாம் . S க்குப் பதிலாக $ பயன்படுத்தலாம் .
எளிதாக கெஸ் செய்யும் வார்த்தைகளான LOVE , GOD , MOTHER , FATHER , போன்றவற்றை பாஸ்வேர்ட் ஆக வைக்காதீர்கள் .
1234 என எண்களை தொடர்ந்தோ , அல்லது qwerty என கீ போர்டில் உள்ள எழுத்துக்களை தொடர்ந்தோ வருவதை பாஸ்வேர்டாக வைக்காதீர்கள் .
ஒரே பாஸ்வேர்டை பல அக்கொண்டிற்கு பயன்படுத்தாதீர்கள் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.