BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 1 September 2014

செப்டம்பர் 15 ஆம் தேதி வெளி வர இருக்கிறது கூகுளின் ஆண்ட்ராய்ட் ஒன் மொபைல் !!



கூகுளின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மொபைல்களின் ஒன்றான ஆண்ட்ராய்ட் ஒன் மொபைலின் வெளியிடுவதற்கான அழைப்பிதல்களை கூகுள் கொடுக்க ஆரம்பித்துவிட்டது . அதன்படி வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி கூகுளின் இந்த மொபைல் வெளிவர உள்ளது . இந்திய நிறுவனங்களான கார்பன் , மைக்ரோமஸ் , ஸ்பைஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த மொபைலை வெளியிட உள்ளது கூகுள் .



இந்த மொபைலின் விலை 10,000 ரூபாய்க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . மற்ற மொபைல்களைப் போல பயனாளர்களின் அனுபவத்தை மொபைல் போனை தயாரிப்பவர்கள் தான் கட்டுப்படுத்துவர் ,ஆனால் ஆண்ட்ராய்ட் ஒன் மொபைலில் இந்த சாப்ட்வேர் மற்றும் பயனாளர்களின் அனுபவத்தை கூகுள் நிறுவனம் கட்டுப்படுத்தும் . இதனால் நமது மொபைலுக்கு அடிக்கடி அப்டேட்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும் .

இந்த ஆண்ட்ராய்ட் ஒன் மொபைல் ப்ரோஜெக்ட் முதன் முதலில் இந்தியாவில் தான் வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது . 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media