பல ஆண்டுகளுக்கு முன் உலகம் எங்கிலும் இருக்கும் மாணவர்களுக்கு அறிவுக் கோவிலாக விளங்கிய நலந்தா பல்கலைக்கழகம் இன்று மீண்டும் தொடங்கப்பட்டது . இதை தொடங்கும் யோசனையை 2006 ஆம் ஆண்டு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் கூறினார் .
இப்போதைக்கு நலந்தா பல்கலைக்கழகத்தில் 15 மாணவர்கள் மற்றும் 11 ஆசிரியர்கள் மற்றும் இருக்கின்றனர் . இது குறித்து அங்கு பணி செய்யும் இரு அதிகாரி கூறுகையில் , " மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடத்திற்கு ஏற்ப தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும் . மேலும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் செப்டம்பர் 14 ஆம் தேதி பல்கலைக்கழகத்தை பார்வையிட உள்ளார் " என்றார் .
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பித்து இருந்தாலும் 15 மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் . அந்த 15 மாணவர்களில் ஒருவர் ஜப்பானைச் சேர்ந்தவர் , மற்றவர் பூட்டானைச் சேர்ந்தவர் .
மத்திய அரசு இந்த பல்கலைக்கழகத்திற்கு 10 வருடத்திற்கு 2,700 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.