BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 1 September 2014

உலகின் வயதான பெண் தொடர்ந்து மூன்று நாட்கள் துங்குவாராம் !!



மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த லியாண்ட்ரா பெக்கரா லும்பெராஸ் என்பவர் தான் உலகின் வயதான பெண்ணாக இருக்கிறார் . ஆனால் இதை யாரும் அங்கிகரிக்கவில்லை . அவருடைய பிறப்பு சான்றிதழ் 40 வயதில் தொலைந்து போனதால் அவரின் பெயர் கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கப்படவில்லை .

அவர் கூறுவது படி அவரின் வயது 127 . அவர் தான் ஆகஸ்ட் 31 ,1887 ஆம் தேதி பிறந்ததாக கூறுகிறார் . அவருக்கு 20 பேரன் பேத்திகளும் , 73 கொள்ளுப் பேரன் பேத்திகளும் , 55 பெரிய  கொள்ளுப் பேரன் பேத்திகளும் இருக்கின்றனர் . அவருக்கு சிறிது காது கோளாறும் , சற்று பார்வை குறைபாடும் தான் இருக்கிறது , மற்றபடி எந்த குறைபாடும் இல்லை .

அவரின் இந்த நெடு நாள் வாழ்வதற்கான ரகசியங்களாக அவர் கூறுவது , நன்றாக உண்பது , திருமணம் செய்யாமல் இருப்பது மற்றும் நீண்ட நேரம் நன்றாக உறங்குவது . அவர் தொடர்ந்து மூன்று நாட்கள் துங்குவாராம் .




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media