ஐஸ் பக்கெட் சேலஞ்ச், ரைஸ் பக்கெட் சேலஞ்ச் ஆகியவைகள் ஃபேஸ்புக்கில் கலக்கின, தற்போது மரம் வளர்ப்பு தொடர்பாக விழிப்புணர்வை உருவாக்க வேண்டி மலையாள நடிகர் மம்முட்டி மை ட்ரீ சேலஞ்ச் சை செய்துள்ளார்.
இது குறித்து மம்மூட்டி குறிப்பிட்டதாவது
"பசுமையான உலகத்திற்கு மரங்கள் வளர்வது முக்கியமானதாகும். நகரமாயக்கல் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ஒரு மரத்தை நடுவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு நம்மால் பல விதங்களில் நன்மை செய்ய முடியும். காற்றை சுத்தப்படுத்துதல், மண் அரிப்பை தடுத்தல், நிழல் தருதல், நீரை மறுசுழற்ச்சி செய்தல், பறவைகள் முதலான பல உயிரினங்களுடன் ஒரு அழகான சூழலை உருவாக்க முடியும்.
ஏல்எல்எஸ் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் இன்று இணையத்தில் பிரபலமடைந்துள்ளது. அதைப் போல, 'மை ட்ரீ சேலஞ்ச்' என்ற புதிய முயற்சியை நான் துவக்குகிறேன். எனது திரையுலக நண்பர்கள் மற்றும் பேஸ்புக் நண்பர்கள் அனைவரும் இந்த நல்ல நோக்கத்திற்காக இணைந்து, இந்த உலகை அனைவரும் வாழத் தகுதியான பசுமையான இடமாக மாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
பாலிவுட் நட்சத்திரம் ஷாரூக் கான், தமிழ் நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா ஆகியோர், மரக்கன்று நட்டு, இந்த மை ட்ரீ சேலஞ்சில் இணைய வேண்டும் என சவால் செய்கிறேன்.
மை ட்ரீ சேலஞ்ச் என்ற இந்த வாசகம், வெறும் வாய் வார்த்தையாக மட்டும் இல்லாமல், நம் இயற்கையை நமக்காகவும், நமக்குப் பின் வரும் தலைமுறைக்காகவும் காப்பாற்ற, அனைவரும் பின்பற்றும் ஒரு நோக்கமாக மாறவேண்டும். ஒரு ஆரோக்கியமான சுற்றுசூழலில் இருக்க வேண்டும் என்று நினைக்கு அனைத்து மக்களும் இதில் இணையலாம். எனவே, உங்கள் தரப்பிலிருந்து சிறிய முயற்சி செய்து, மை ட்ரீ சேலஞ்சை எடுத்து, ஒரு மரக்கன்றை நடுங்கள். மரங்களை எப்போது, எப்படி முடியுமோ, காப்பாற்றுங்கள்.
இதன் மூலம் நம் இயற்கை வளங்களை காக்க, உங்களது குடும்பம், நண்பர்கள், சுற்றியிருப்பவர்கள் என அனைவருக்கு ஒரு தூண்டுகோலாக இருங்கள். இயற்கையையும், சுற்றுச்சூழலையும் மதிப்பதில் நம் குழந்தைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருப்போம். விலைமதிப்பற்ற நமது உலகை நாம் அவ்வாறே பார்த்துக் கொள்வது தான் முறை.
நீங்கள் மரம் வைத்த புகைப்படத்தை ஃபேஸ்புக் டிவிட்டரில் அப்லோட் செய்யும் போது www.facebook.com/MyTreeChallenge ஃபேஸ்புக் பக்கத்தையும் , ட்விட்டர் குறிச்சொல் #MyTreeChallenge ஐயும் குறிப்பிட மறக்காதீர்கள்"
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.