செக்ஸ் உணர்வை அதிகரிக்கவும், செக்ஸ் வாழ்க்கைக்கு பலம் கூட்டவும், ஏகப்பட்ட மருந்துகள் உள்ளன, ஆனால் இந்த மருந்துகள் எல்லாம் கெமிக்கல் பொருட்களால் தயாரிக்கப்பட்டது மட்டுமின்றி நிறைய பக்க விளைவுகளும் உண்டு, ஆனால் இயற்கையான முறையில் நாம் முன்பு தினமும் உணவில் பயன்படுத்தி வந்த ஒரு பொருள் பக்க விளைவுகள் இன்றி செக்ஸ் உணர்வை அதிகரித்துள்ளது, ஆம் அந்த பொருள் வெந்தயம் தான்.
வெந்தயத்திற்கு, செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆண்களின் செக்ஸ் ஹார்மோனை இது தூண்ட வெந்தயம் உதவுகிறது.
வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு, செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கிறதாம். இந்த ஆய்வுக்காக 25 வயது முதல் 52 வயது வரையிலான 60 ஆரோக்கியமான ஆண்களை ஆய்வுக்குட்படுத்தினர். அவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 முறை என மொத்தம் 6 வாரங்களுக்கு வெந்தயச் சாறு கொடுத்தனர்.
இந்த ஆய்வுக்காலத்தில் அவர்களது செக்ஸ் உணர்வுகள் கண்காணிக்கப்பட்டன. ஆறு வார காலத்திற்குப் பின்னர் அவர்களது செக்ஸ் உணர்வுகள் 16.1 என்பதிலிருந்து 20.6 சதவீதமாக அதிகரித்திருந்தது.
வெந்தயம் சாப்பிடாமல் வேறு ஒரு குழுவினரை ஆய்வுக்குட்படுத்திப் பார்த்தபோது அவர்களுக்கு செக்ஸ் உணர்வுகள் மந்தமாகவே இருந்தது தெரிய வந்தது.
வெந்தயச்செடியின் விதைகளில் சபோனின் எனப்படும் ஒரு பொருள் உள்ளது. அது ஆண்களின் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரனை தூண்டும் சக்தி உடையது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
படுக்கை அறையில் இனி முழுமையான செக்ஸ் உணர்வுகளுடன், சந்தோஷமாக இருக்க, கிச்சனில் உள்ள வெந்தயத்தின் மீது கண் வையுங்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.