BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 1 September 2014

நல்ல காரணங்களுக்காக ஐஸ் பக்கெட் சேலஞ்சை செய்யாமல் தவிர்த்த பிரபலங்கள் !!



ஐஸ் பக்கெட் சேலஞ்ச் யார் யார் செய்தார்கள் என்று இதுவரை பார்த்தோம் , இப்போது அந்த சேலஞ்சை யார் யார் செய்யாமல் நல்ல காரணங்களுக்காக மறுத்துள்ளார்கள் என்பதைப் பார்ப்போம் .



1 ) பிரியங்கா சோப்ரா

பலர் இவரை இந்த சேலஞ்ச் எடுக்க சொல்லி வலியுறுத்தியும் இவர் அதை எடுக்க மறுத்துள்ளார் . அதற்கான காரணத்தையும் அழகாக தெரிவித்துள்ளார் . இவர் அமெரிக்க செய்தி வாசிப்பாளரின் முடிவை தனது டிவிட்டர் லிங்கில் ஷேர் செய்து , இந்த சமுதாயத்தில் வேறு எந்த வழிகளில் எல்லாம் நன்மை செய்யலாம் என்பதை வலியுறுத்தினார் .

2 ) சோனம் கபூர்

இவரும் இந்த சேலஞ்சை எடுக்க மறுத்துள்ளார் . இவர் அந்த நிறுவனத்திற்கு நன்கொடை அளித்து விட்டதாகவும் , தண்ணீரை வீணடிப்பதில் நம்பிக்கை இல்லை என்று கூறினார் .

3 ) பமீலா ஆண்டர்சன்

இவர் ஏன் மறுத்தார் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே .  ஏன் என்று படிக்க

http://www.satrumun.net/2014/08/pamela-anderson-opposes-ice-bucket-challenge.html

4 ) ராகுல் போஸ்

இந்தியாவின் திறமையான நடிகர்களில் ஒருவரான இவரும் இந்த சேலஞ்சை எடுக்க மறுத்துள்ளார் . பிரபல டென்னிஸ் வீரர் இவரை நாமினேட் செய்தார் . அதற்கு இவர் அந்த நிறுவனத்திற்கு நன்கொடை கண்டிப்பாக அளிப்பதாகவும் , நல்ல தண்ணீரை வீணடிக்கப் போவதில்லை என்றும் கூறினார்.

5 ) சார்லி ஷீன்

பிரபல ஹாலிவுட் நடிகரான இவர் ஐஸ் பக்கெட் சேலஞ்சை வேறு மாதிரி எடுத்தார் . பக்கெட்டை தண்ணீரால் நிரப்பாமல் , முழுவதும் பணத்தால் நிரப்பினார் . பின்னர் இந்த சேலஞ்சை செய்யாமல் தன்னால் முடிந்ததை அந்த நிறுவனத்திற்கு அளிக்க உள்ளதாக தெரிவித்தார் .




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media