இணையத்தில் தங்களின் தனி நபர் பாதுகாப்பு இப்போது நடந்துள்ள ஒரு பரபரப்பான சம்பவத்தால் கேள்விக் குறியாக்கியுள்ளது . பிரபலமான நடிகைகள் பலரின் ஆபாச போட்டோக்களை ஒரு ஹேக்கர் ஒருவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார் .
இணையத்தில் வெளியிட்ட அந்த ஹேக்கர் , அடுத்து தன்னிடம் ஜென்னிபர் லாரன்ஸின் வீடியோ ஒன்று இருப்பதாகவும் , அதனை வெளியிட பேபால் இணையதளம் மூலம் பணம் செலுத்த வேண்டும் என்று பணம் வசூலித்துள்ளார் . அந்த வீடியோ 2 நிமிடம் இருப்பதாகவும் அதில் அந்தரங்க உறுப்புகள் தெரிவதாகவும் செய்தி வெளியிட்டு இருந்தார் . மேலும் அந்த வீடியோவை எப்படி மற்றவர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் அப்லோட் செய்ய வேண்டும் என்றும் கேட்டுள்ளார் .
இது குறித்து ஜென்னிபர் லாரன்ஸின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் , " இது ஒருவரின் தனி நபர் உரிமையை மீறும் செயலாகும் . இணையத்தின் உரிமையாளர்களிடம் தொடர்பு கொண்டு பேசிவிட்டோம் . அந்த போட்டோக்களை திருடியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் " என்று கூறினார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.