BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 2 February 2014

தேமுதிக வாகனம் மோதி விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்த வைகோ

                                                  

மதுரை மாவட்டம் சிகரக்கோட்டை அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் மீது, தேமுதிக மாநாட்டிற்கு கலந்து கொள்ளச் சென்றவர்கள் பயணம் செய்த வாகனம் மோதியுள்ளது.  இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்களுக்கு, இதையடுத்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால், விபத்தை ஏற்படுத்திய வாகனம் அடிபட்டவர்களைக் கவனிக்காமல் நிற்காமல் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

அப்பொழுது அந்த வழியாக திண்டுகல்லிற்கு காரில் சென்று கொண்டிருந்த வைகோ, சம்பவ இடத்தில் மக்கள் கூட்டமாக இருந்தததை பார்த்து, தனது வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கி பார்த்துள்ளார். அங்கு விபத்தில் காயம் அடைந்து, ஆபத்தான நிலையில் இருந்த இரு நபர்களை கண்டு பதறிய வைகோ, உடனடியாக அவர்களைத் தன்னுடன் வந்த வாகனங்களில் ஏற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார். இதை தொடர்ந்து மருத்துவமனையில் பணியிலிருந்த மருத்துவர் அருள் ராஜ்குமாரிடம் விபத்தில் அடிபட்டவர்களை நன்கு கவனித்து கொள்ளுமாறு கூறிவிட்டு, விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார் வைகோ.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media