திமுக எம்பியும் திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி கருணாநிதிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து திமுக தரப்பில் கூறப்பட்டதாவது கனிமொழி கருணாநிதி அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பேச பல மணிநேரமாக ஓய்வின்றி பேச வேண்டியதை தயார் செய்து கொண்டிருந்தார், ஓய்வின்றி . பல மணிநேரமாக வேலை பார்த்ததால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதனால் தான் கனிமொழி கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார்கள்.
முன்னாள் உளவுத்துறை தலைவர் ஜாஃபர் சேட்டும், கலைஞர் டிவி எம்டி ஷரத் ரெட்டியும் 2011ல் பேசிய தொலைபேசி உரையாடல் வெளியிடப்பட்டது இதில் கலைஞர் டிவிக்கு சினியுக் நிறுவனத்திலிருந்து 200 கோடி பணம் கைமாறிய போது கனிமொழி கருணாநிதி கலைஞர் டிவியில் எம்.டி.யாக இருந்தார் என்றும், தான் முன் தேதியிட்டு பல கோப்புகளில் கையெழுத்திட்டதாகவும் பேசிக்கொண்டார்கள், இதையடுத்து ஆவணங்களை திருத்துதல் உள்ளிட்ட பல சிக்கல்கள் கனிமொழி கருணாநிதி தரப்புக்கு எழுந்துள்ளது, இது கனிமொழி கருணாநிதி, ஷரத் ரெட்டியின் ஜாமீனை ரத்து செய்யும் அளவுக்கு சிக்கல் நிறைந்தது, இதையடுத்து இன்று காலை சிஐடி நகர் காலணி வீட்டில் பல முக்கிய திமுக பிரமுகர்களுடன் திமுக தலைமை இதுகுறித்து தீவிர ஆலோசனை நடத்தியதாகவும் தெரியவந்துள்ளது, இந்நிலையில் கனிமொழி கருணாநிதி மருத்துவமனையில் சேர்த்திருப்பது ஜாமீன் ரத்தாகாமல் தடுக்கவா என்பது உட்பட பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.