BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 13 March 2014

பிரதமரை சந்தித்த அழகிரி, திமுக-காங்கிரஸ் முறிவு பற்றி வருத்தம் தெரிவித்த பிரதமர்


டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் அழகிரி இன்று காலை சந்தித்தார். சுமார் 15-நிமிட சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் வருத்தம் தெரிவித்ததாகவும் பதிலுக்கு தாமும் வருத்தத்தை தெரிவித்ததாகவும் கூறினார். 2009-ல் இருந்து 2013 வரை மத்திய அமைச்சரவையில் பணியாற்ற தனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்ததாகவும் கூறினார். மேலும், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

புதிய கட்சி தொடர்பாக கேள்வி எழுப்பப்ட்டபோது, இது குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசித்து 2 மாதங்களுக்கு பின்னரே முடிவெடுக்க முடியும் என தெரிவித்தார்.

அழகிரி புதிய கட்சி ஆரம்பித்தால், அவருக்கு இருக்கும் வரவேற்பு குறித்தும், திமுகவிற்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் உங்களுடைய கருத்தை கமென்டில் தெரிவியுங்கள்!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media