நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில் , நாட்டின் ஒருமைப்பாட்டின் விதமாக அமையவுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இரும்பு மனிதருக்கான இந்த சிலை மோடியின் குஜராத் மாநிலத்தில் அமைய உள்ளது. இந்த சிலை உலகிலே உயரமான சிலை என்னும் பெருமையை பெற உள்ளது. இதன் உயரம் 182 அடி ஆகும். இந்த சிலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்த போது அந்த விழாவிற்கு முன்னிலை வகித்தவர் மோடி.
ஆனால் பெண்கள் பாதுகாப்பிற்கு என ஒதுக்கப்பட்டு உள்ளது வெறும் 150 கோடி தான். தினம் தினம் நாம் பத்திரிக்கைகளிலும் செய்திகளிளும் பார்க்கும் செய்தி பெண்கள் கற்பழிப்பு என்பது தான். இதற்கு முக்கியத்துவம் தராமல் எதற்காக ஒரு சிலைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று விமர்சனம் எழுந்து உள்ளது. உலகிலேயே உயரமான சிலை அமைப்பது என்பது பாராட்ட வேண்டிய செயல் தான் ஆனால் அதனை விட நாம் மானுட வளர்ச்சியில் பின் தங்கி இருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு அதற்கு முன்னுரிமை கொடுத்து இருக்க வேண்டும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.