உலகிலேயே அதிக வேலை பளு உள்ள பிரதமர்கள் என்று அது இந்திய பிரதமர்கள் தான். அதற்கு முக்கிய காரணம் நம் நாட்டின் மக்கள் தொகை.அப்படிபட்டவர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்னென்ன சலுகைகளை பெறுகிறார் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா.
இந்திய பிரதமருக்கு அடிப்படை சம்பளமாக 50 ஆயிரமும்,செலவினங்கள் படி மாதம் 3 ஆயிரமும், தினசரி படி 2 ஆயிரம் என மாதத்திற்கு 62 ஆயிரமும், தொகுதி மற்றும் அலுவலக படியாக 45 ஆயிரமும் என மொத்தம் ரூ. 1 இலட்சத்து 60 ஆயிரம் மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. இது தான் மோடியின் தற்போதைய ஒரு மாத சம்பளம். இது மட்டும் அல்லாமல் பல சலுகைகள் உள்ளன.
பிரதமருக்கு என தனியாக 5 பி.எம்.டபிள்.யூ கார்கள் உள்ளன. இவை குண்டு துளைக்காத, பெட்ரோல் டேங் வெடிக்காத ,எந்த வாயுவும் தாக்காத கார் ஆகும். பிரதமரை பாதுகாப்பதற்கு என்றே எப்போதும் அவருடன் தனி பாதுகாப்பு படை உடன் இருக்கும் . பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்கு என தனி விமானம் உள்ளது. இதில் அவருக்கு என தனி படுக்கையறை, அலுவலக அறை, தொலைபேசி இருக்கும்.
பிரதமர் ஒய்வு பெற்ற பின் 20000 ஆயிரம் ஒய்வூதியமாக வழங்கப்படும். அவருக்கு என வாழ்நாள் முழுவதும் டெல்லியில் தனி வீடு வழங்கப்படும்.அந்த வீட்டுக்கு வாடகை,மின்சாரம், குடிநீர் என எந்த கட்டணமும் விதிக்கப்பட மாட்டாது.
இத்தனை சலுகைகளை பெறுபவர் நாட்டுக்காக எப்படி உழைக்க வேண்டும். ஆனால் அவர்களே இந்த சுகங்களை மட்டும் அனுபவித்து விட்டு சென்று விடுகிறார்கள்.
மோடி புதியவரா அல்லது அவர்களை போல் தானா என்று பொருத்து இருந்து
பார்ப்போம்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.