BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 11 July 2014

மார்க் குறைவான மாணவர்களும் இனி கல்விக் கடன் பெறலாம் - சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு !!



12 ஆம் வகுப்பில் , இனி 60% குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களும் தங்களுடைய உயர் கல்விக்காக வங்கிகளிடம் கடன் பெறலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது .

ரவி என்பவரின் மகன் 12 ஆம் வகுப்பில் 59 சதவீத மதிப்பெண்கள் எடுத்து இருந்தார் . அவர் ஐ.ஓ.பி வங்கியில் வங்கிக் கடன் கேட்டு இருந்தார் . 60 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண்கள் இருந்ததால் ,  ஐ.ஓ.பி வங்கி கடன் தர மறுத்தது . இதனால் ரவி உயர்நீதிமன்றத்தில் ரவி மனுதாக்கல் செய்தார் . நீதிமன்றம் கடன் வழங்கலாம் என உத்தரவிட்டது ,இதனை எதிர்த்து  ஐ.ஓ.பி வங்கி மேல் முறையீடு செய்தது .

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் , " பின் தங்கிய சமூகத்தை சேர்ந்தவர்களும் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் மத்திய அரசு , தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடன் வழங்க்ம் திட்டத்தை அறிமுகம் செய்தத்து . அரசின் இந்த திட்டத்தைக் கருத்தில் கொண்டு வங்கிகள் முடிவெடுக்க வேண்டும் .

இதனால் 60 சதவீதத்துக்கு அதிகமாக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு மட்டும் கல்விக் கடன் வழங்குவோம் என்று வங்கிகள் முடிவு செய்யக் கூடாது " என்று தீர்ப்பு வழங்கியது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media