BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 11 July 2014

முடிந்து விட்டது என்று நினைத்த ஹாரிபாட்டர் திரும்பவும் வருகிறது !!



ஹாரிபாட்டர் , இந்த பெயரை தெரியாத மக்களை இந்த உலகத்தில் காண்பது அரிது . படிப்பவர்கள் , பார்ப்பவர்கள் என அனைவரையும் ஒரு மேஜிக் பள்ளிக்கு அழைத்து சென்று அந்த பள்ளியில் படிக்கும் ஒரு அனுபவத்தைக் கொடுத்தது . இதனை ஏழு தொடர்களாக ஜெ.கே.ரொவ்லிங் எழுதினார் . கடைசியாக 2007 ஆம் ஆண்டு வெளியானது . பின்னர் ஹாரிபாட்டர் தொடரை நிறுத்தப் போவதாக அறிவித்தார் .

ஆனால் எல்லாரையும் ஆச்சர்ய படுத்தும் விதமாக , நேற்று ஜெ.கே.ரொவ்லிங் தன்னுடய இணைய பக்கத்தில் ஒரு கதையை வெளியிட்டார் , அதிகமான மக்கள் இதனை பார்த்ததால் சிறிது நேரம் அந்த இணையதளம் முடங்கியது .

அன்று வெளியான கதையில் , ஹாரி பாட்டர் ஒரு 34 வயது இளைஞனாக வருகிறார் . அவருடன் அவரின் நண்பர்கர்ளான ரான் மற்றும் ஹெர்மாயினியும் தங்களுடைய பழைய பள்ளியில் , நடக்கும் குயுடிச் போட்டியின் இறுதிப் போட்டியைக் காண வருகின்றனர் . இவ்வாறு கதை நகருகிறது .

முடிந்து விட்டது என்று நினைத்து கொண்டு இருந்த போது திடீரென வெளியானதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் . 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media