அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வாழ்ந்து வந்தார்கள் சாவா ஸ்ட்ரின்னும் அவரது தாயாரான சூசி ரோசெந்தாலும். மகளுக்கு 28 வயதும், தாய்க்கு 61 வயதும் இருந்தது. அந்த தாயார் கடந்த 2011 ஆண்டு அன்று இறந்து விட்டார். அவரது தாயார் மீது உள்ள பாசத்தினால் அவரை புதக்கவோ எரிக்கவோ அவரது மகளுக்கு மனம் வரவில்லை. அதனால் பிணத்தை வீட்டிலையே வைத்து விட்டார்.
அவர் உயிருடன் இருப்பது போல கற்பனை செய்து கொண்டார். அவருக்கு உணவு வைப்பது , அவருடன் படுத்து உறங்க்குவது என 3 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். ஆனால் பிண நாற்றம் அதிகம் வந்ததால் அருகில் உள்ளவர்கள் போலிஸில் புகார் கொடுத்து விட்டார்கள். போலிஸார் அங்கு வந்து பார்த்த போது பிணம் அழுகிய நிலையில் இருந்தது. அவர்கள் பிணத்தை அப்புறப்படுத்தி விட்டு அவரது மகளை மனநல மருத்துவமனையில் சேர்த்து உள்ளார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.