BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 11 July 2014

அம்மா சொன்னதால் , முதல் இருக்கையில் அமர்ந்து பட்ஜெட் தாக்கலை கவனித்த ராகுல் காந்தி !!!



நேற்று மோடி அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது . பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்ட் போது , பின்னாடி இருக்கையில் அமர்ந்து இருந்தார் ராகுல் காந்தி . அப்போது அருண் ஜெட்லி 5 நிமிட இடைவேளை கேட்டார் . சபாநாயகரும் அதற்கு ஓப்புக் கொண்டார் . அந்த நேரத்தில் , அனைவரும் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டனர் .

அந்த சமயம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி , தன்னுடைய மகன் மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தியை தன்னுடன் வந்து முதல் இருக்கையில் அமரும் படி கேட்டுக் கொண்டார் . இதனால் மீண்டும் பட்ஜெட் தாக்கல் தொடங்கும் போது , ராகுல் முதல் இருக்கையில் காணப்பட்டார் .

பட்ஜெட் குறித்த முக்கிய குறிப்புகளை தீவிரமாக எடுத்தார் . ஏற்கப்னவே ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் தூங்கிய காட்சி இணையத்தில் வெளிவந்து , மிக வேகமாக பரவிக் கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media