BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 13 July 2014

மீண்டும் ஒரு அடி வாங்கியது பிரேசில் அணி, 4 வது இடத்தை பெற்றது




3 வது இடத்திற்கான போட்டி நடைபெற்றது . இதில் போட்டியை நடத்தும் பிரேசில் அணியும், கடந்த முறை இரண்டாம் இடம் பெற்ற நெதர்லாந்து அணிகளும் மோதின. ஜெர்மனி அணியிடம் பெற்ற தோலிவியை மறந்து விட்டு எப்படியாவது 3 வது இடம் பெற்று விடுவார்கள் என நம்பினார்கள் உள்ளூர் ரசிகர்கள். ஆனால் அவர்களுக்கு கிடைத்ததோ ஏமாற்றம் தான்.

ஆட்டத்தின் 2 வது நிமிடத்திலே பெனால்டி மூலம் நெதர்லாந்து வீரர் வான் பெர்சி கோல் அடித்தார். இதனால் பிரேசில் வீரர்களும் , ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தார்கள். இருந்தாலும் நம்பிக்கையுடன் விளையாடினார்கள். ஆனால் 17 வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியினர் 2 வது கோலை அடித்தார்கள். பிரேசில் அணியினர் இறுதி வரை போராடினார்கள், ஆனால் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. 91 வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி 3 வது கோலை அடித்து 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் அணிக்கு 4வது இடம் தான் கிடைத்தது. இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் காயத்தில் சென்றது.





Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media