தங்களுக்கு உரிய நேரத்தில் தங்களுடைய பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கவில்லை என ஒரு நாட்டில் மகள்கள் வழக்கு தொடுப்பது அதிகரித்து வருகிறது . எந்த நாடு என்று தெரியுமா ?? இறுக்கமான சட்டங்களைக் கொண்ட சவுதீ அரேபியாவில் இந்த வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது ஆச்சரியமாக இருக்கிறது .
திருமணம் செய்வதில் காலம் தாழ்த்தப்படுவதால் பெண்கள் அதிகமாக மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன . எனவே சவுதீயில் உள்ள பெண்கள் தங்களது பெற்றோர்கள் தங்களுக்கு உரிய நேரத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளனர் .
எனவே இவ்வாறு வழக்கு தொடுப்பது அதிகரிப்பதைக் கண்ட சமூக ஆர்வலர் ஒருவர் , குறிப்பிட்ட வயதை எட்டியவுடன் பெண்கள் தங்கள் பெற்றோரின் அனுமதிக்காக காத்திராமல் தாங்களாகவே திருமணம் செய்து கொள்ளும் சட்டம் கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.