இந்தியாவிலையே இப்போது அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார் என்றால் அது நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆக தான் இருக்கும். இவர் கடைசியாக நடித்த எந்திரன் படத்தில் இவரது சம்பளம் மட்டும் 50 கோடி என கூறப்பட்டது. ஏனென்றால் இவருக்கு என தனி ரசிகர் கூட்டம் உலகம் முழுவதும் உள்ளது. இவரது படம் எப்போது வரும் என காத்து கொண்டு இருக்கும் பல பக்தர்களும் இருக்கிறார்கள். இப்போது இவர் வாங்கும் சம்பளத்தை முந்துவதற்கு ஒருவர் வந்து விட்டார். அவர் வேறு யாரும் இல்லை பாலிவுட் ஸ்டார் ஹிரித்திக் ரோஷன் தான்.
இவர் அடுத்து நடிக்க போகும் படம் "மொகன்ஜதாரோ" ஆகும். இது ஒரு சரித்திர படம் ஆகும். அதனால் படப்பிடிப்பிற்கு அதிக நாள்கள் ஆகலாம், படப்பிடிப்பில் சில கடினமான காட்சிகள் இடம் பெறலாம். அது மட்டுமல்லாமல் பாலிவுட் படங்களுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு உள்ளது. இது ஒரு சரித்திர படம் என்பதால் அதிகம் பேரை கவரும் விதமாக இருக்கும். எனவே படத்தின் லாபம் உயரும் என்பதால் தனது சம்பளத்தை ஹிரித்திக் உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.