BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 13 July 2014

இன்று கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத நாள்




கடந்த 2002 ஆம் ஆண்டு ஜுலை13 ஆம் தேதி தான் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து அணிகள் பங்கேற்ற நாட்வெஸ்ட் தொடரின் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவும், இங்கிலாந்தும் இறுதி போட்டியில் மோதின. இது தான் உலகில் உள்ள அனைவரையும் இந்தியா கிரிக்கெட்டை திரும்பி பார்க்க வைத்தது. இந்தியா ரசிகர்களிடமும் நம்பிக்கையை ஏற்படுத்தியது இந்த போட்டி தான்.

இதில் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் நாசிர் ஹுசைனும், ட்ரஸ்கோதிக்கும் சதமடிக்க அந்த அணி 50 ஒவர்களில் 325 ரன்கள் எடுத்தது. அது நல்ல டார்கெட் என்றாலும் இந்தியாவின் தொடக்கம் நன்றாக அமைந்தது. கங்குலியும், சேவாக்கும் சேர்ந்து 106 ரன்கள் சேர்த்தனர். முதல் விக்கெட்டாக கங்குலி வீழ்ந்தார். அதன் பிறகு வந்த யாரும் நிலைத்து ஆடவில்லை. மேலும் 40 ரன்களை சேர்ப்பதற்குள்   சேவாக்,சச்சின்,டிராவிட் அவுட் ஆகிவிட்டனர். சச்சின் அவுட் ஆகி விட்டதால் பலரும் மேட்ச் பார்ப்பதை நிறுத்தி விட்டனர். அனைவரும் இந்தியாவின் தோல்வி உறுதி என நினைத்தனர்.

ஆனால் ஆட்டத்தின் போக்கு மாறியது. இளம் வீரர்களான யுவராஜும் ,கைஃபும் ஜோடி சேர்ந்தனர். 25 ஒவர்களில் 180 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்த ஜோடி 121 ரன்கள் சேர்த்தது. இறுதியில் ஆட்டத்தின் போக்கும் மாறியது. யுவராஜ் ஆட்டமிழந்த போது யார் ஜெயிப்பார்கள் என்ற பதட்டம் இருந்தது. கடைசி ஒவரில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. 3 பந்துகள் மீதம் இருக்கையில் வெற்றி நம் வசம் வந்தது. மைதானத்திற்குள் வெற்றியை கொண்டாடி கொண்டு இருந்த அனைவரின் பார்வையும் லார்ட்ஸ் மைதான பால்கனிக்கு வந்தது.

அங்கு இந்திய கேப்டன் கங்குலி தனது சட்டையை கழ்ற்றி சுற்றி கொண்ட் இருந்தார். இது அனைவரையும் கவர்ந்தது. இந்த போட்டியில் தான் கங்குலிக்கு என தனி ரசிகர் கூட்டம் உருவாகியது. இளம் வீரர்கள் மீதும் நம்பிக்கை வந்தது


இன்றும் கூகுளில் சென்று லார்ட்ஸ் பால்கனி என்று அடித்தால் அங்கு முதலில் வருவது கங்குலி சட்டையை கழற்றி சுற்றும் படம் தான்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media