சனிக்கிழமையில் இருந்து 75 நாளில் மங்கல்யான் செவ்வாய் கிரகத்தைச் சென்று அடையும் ...
மங்கல்யான் தனது செவ்வாய் கிரகத்தை நோக்கிய 680 மில்லியன் கீ.மீ பயணத்தை தொடர்ந்து சென்று கொண்டு இருக்கிறது . இந்த பயணத்தில் 525 மில்லியன் கீ.மீ இதுவரை கடந்துள்ளது . இந்த விண்கலம் செப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தை சென்று அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த விண்களம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தைச் சென்று அடைந்தால் , செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பிய நாடுகள் என்னும் மதிப்புமிக்க பட்டியலில் இந்தியாவுக்கு ஒரு இடம் கிடைக்கும் . இதுவரை அமெரிக்கா , ரஷ்யா , ஐரோப்பிய நாடுகள் மட்டுமே செவ்வாய் கிரகத்துக்கு விண்களம் அனுப்பியுள்ளது .
இந்த விண்கலத்தை வடிவமைக்க 450 கோடி ஆனது . இது நாசாவின் விண்கலத்தைக் காட்டிலும் ஆறு மடங்கு குறைந்த செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.