
தல அஜித்திற்கு 1999 ஆம் ஆண்டு வந்த "அமர்களம்" படத்தில் நடித்த போது நடிகை ஷாலினியுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தார்கள். ஆனால் இதற்கு அவர்கள் வீடுகளில் எதிர்ப்பு இருந்து. ஏனென்றால் அஜித் ஒரு பிராமின் மற்றும் ஷாலின் ஒரு கிறித்துவ பெண். இதனால் அவர்கள் வீட்டில் எதிர்ப்பு இருந்தது. இந்த எதிர்ப்பையும் மீறி 2000 ஆம் ஆண்டில் ஷாலினியை திருமணம் செய்து கொண்டார். அதில் இருந்து ஷாலினி நடிப்பதை நிறுத்தி விட்டார். 8 ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அவளின் பெயர் அனோஷ்கா. அவரது பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்திற்கு 50 ஆயிரம் லைக்குகளுக்கு மேல் உள்ளது.
இப்போது இந்த தம்பதிகளுக்கு அடுத்த குழந்தை பிறக்க உள்ளது. இது பற்றிய தகவலகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அஜித்திடம் இருந்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வரவில்லை. எப்படியோ அனோஷ்காவுக்கு கூட விளையாடுவதற்கு இன்னொரு பாப்பாவோ பையனோ வரப்போகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.