சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள ஒரு கட்டிடம் கடந்த மாதம் 28 ஆம் தேதி அன்று இடிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை செய்து கொண்டு இருந்த 61 பேர் பலியாகினர். இது 11 மாடி கட்டிடம் என்பதால் மீட்பு பணிகள் ஒரு வாரம் நடந்தது. இதில் சுமார் 25 பேர் மட்டும் மீட்கப்பட்டனர். இந்த விபத்து நடந்து ஒரு மாத காலம் முடிய போகிறது. இந்த கட்டிடத்தில் வீட்டை வாங்கியோரின் நிலை என்னவென்று தெரியாமல் இருந்து வந்தது. இப்போது அதில் புதிய திருப்பம் வந்து உள்ளது,
இத்தனை நாட்கள் அவர்கள் பொறுமையுடன் இருந்து பார்த்தார்கள். ஆனால் அவர்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பதாக தெரியவில்லை. இங்கு வீடு வாங்கியோர் எல்லாம் பெரிய பணக்காரர்கள் இல்லை . பலரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். எப்படியாவது ஒரு சொந்த வீடு வாங்கி விட வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்து, வங்கியில் கடன் வாங்கி இந்த வீட்டை வாங்கி உள்ளார்கள்.
இங்கு இருக்கும் ஒரு வீட்டின் மதிப்பு சுமார் 70 இலட்சம் இருக்கும். கடன் கொடுத்த வங்கிகள் இப்போது வட்டி கட்ட சொல்லி விட்டார்கள். தனக்கு என்று ஒரு வீடு வருகிறது என்றால் அதற்கு வட்டி கட்டலாம். ஆனால் எந்த உபயோகமும் இல்லாமல் எதற்கு வட்டி கட்ட வேண்டும் என நினைகிறார்கள். அதனால் வங்கியிடம் அந்த கடனை தள்ளுபடி செய்யுமாறு கேட்டார்கள், ஆனால் வங்கி மறுத்து விட்டது. இதனால் அவர்கள் புது அமைப்பு ஒன்றை ஆரம்பித்து உள்ளார்கள். அந்த விபத்தால் பாதிக்கப்பட்டு வீட்டை இழந்தவர்களால் அமைக்கப்பட்டு உள்ளது. இப்போது இவர்கள் அரசிடம் அவர்கள் இழந்த பணத்தை கேட்கிறார்கள். மீடியாவின் உதவியையும் நாடி உள்ளார்கள். இதனை சட்டப்படியும் நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகிறார்கள்.
இந்த தகவல்களை அந்த அமைப்பை சேர்ந்த ரத்னா மிஷ்ரா என்பவர் தெரிவித்தார். வீட்டை கட்டியவர்கள் சிறையில் இருப்பதால் யாரிடம் நியாயம் கேட்பது என தெரியாமல் இருக்கிறார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.